Jan 29, 2011

மூன்றாம் விரல்












புண்பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றுகிறோம்
என்றெல்லாம் பழமொழி பேசும்
அன்பிற்குரிய நண்பர்களே..!

புண்ணுக்கு மருந்து புகைதானா ?
அப்படியென்றால்
ஈழத்தமிழர்கள் எத்தனையோபேர்
கை கால்களை இழந்து
புண்பட்டுத் துடிக்கிறார்கள்
யாராவது அவர்களுக்கு
புகைமூட்டமாவது போட்டுக்கொடுங்களேன்.!

பஞ்சுவச்ச சிகரெட்டை பற்றவைத்து
முத்தமிட்டு உறிஞ்சுகிறீர்களே
ஒருவேளையதில் தேன்வடிகிறதோ..?

உங்களில் ஒருவனென்ற
உரிமையோடு கேட்க்கிறேன்
ஒப்புக்கொள்வீர்களா ?


ஓடும்போது இளைப்பும்
உழைக்கும்போது களைப்பும்
மலையேரும்போது மலைப்பும்
மாங்காய்த்தின்றால் “சளிப்பும்
எற்படுமென்கிறேன்
ஒப்புக்கொள்வீர்களா?


புகைப்பிடித்தால்
மதுவருந்தும் “வாய்ப்பை இழப்பாய்
மனைவியின் இதழ்களில்..!
ஒப்புக்கொள்வீர்களா?

பின்சுக்குழந்தையை கையிலெடுத்து
கொஞ்ச முயலுங்கள்
முத்தம் வேண்டாமென்று
முகத்தை திருப்பி
மூச்சுத்திணற அழுதுவிடும்..!
ஒப்புக்கொள்வீர்களா? 

22 comments:

  1. அருமையா இருக்குது.....

    ReplyDelete
  2. கலக்கீட்டீங்க அருமை அருமை

    ReplyDelete
  3. மிக்க நன்றி திரு.மனோ.
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி yoga.
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  5. மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  6. அருமை நண்பா.
    Kissing a smoker is just like licking an ashtray.
    என்று என் நண்பனின் தோழி ஒருமுறை கூறினாள். அதற்குப் பிறகு அவன் விட்டுவிட்டான் - சிகரெட்டை அல்ல தோழியை.
    எனது இந்தக் கவிதையையும் பாருங்களேன். http://sivakumarankavithaikal.blogspot.com/2010/08/dedicated-to-all-smokers.html

    ReplyDelete
  7. //புகைப்பிடித்தால்
    மதுவருந்தும் “வாய்”ப்பை இழப்பாய்
    மனைவியின் இதழ்களில்..!
    //

    உண்மைதான் .

    ReplyDelete
  8. ஒரு கவியின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி. அருமை ! தொடரட்டும் பயணம்...

    ReplyDelete
  9. என்வலைதளம் வந்து வாழ்த்திய சேவியர் மற்றும் சிவகுமாரன் அவர்களுக்கு நன்றி,

    ReplyDelete
  10. கவிதை அருமை..சமுதாயப் பொறுப்புணர்வுடன்
    அமையப் பட்ட கவிதை!!தொடருங்கள்..தொடர்கிறேன்!!!

    ReplyDelete
  11. என்வலைதளம் வந்து வாழ்த்திய பால்ராஜ் அவர்களுக்கு நன்றி,தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  12. என்வலைதளம் வந்து வாழ்த்திய ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி,தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  13. அட சிகரெட்டுக்கு கவிதை! ரொம்ப நல்லா இருக்குங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. கவிதையுடன் சேர்ந்து விழிப்புணர்வு பதிவு நல்லாருக்கு நண்பரே,

    தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பின்சுக்குழந்தையை கையிலெடுத்து
    கொஞ்ச முயலுங்கள்
    முத்தம் வேண்டாமென்று
    முகத்தை திருப்பி
    மூச்சுத்திணற அழுதுவிடும்.


    ......இதை விட தெளிவாக சொல்லி புரிய வைக்க முடியாது.

    ReplyDelete
  16. கவிதையுடன் சேர்ந்து விழிப்புணர்வு பதிவு நல்லாருக்கு நண்பரே,

    தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. என்வலைதளம் வந்து வாழ்த்திய
    போளூர் தயாநிதி, எஸ்.கே,சித்ரா, மாணவன்
    மற்றும் குறிஞ்சி ஆகியோருக்கு நன்றி.

    ReplyDelete
  18. தங்கள் கவிதையில் சமுதாயப் பார்வையும், புகை பிடிப்போரைத் திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணமும் பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. உங்கள் ஆதங்கம் புரிகிறது. புரியவேண்டியவங்க புரிந்துகொண்டால் சரி. கவிதைக்கு வலுச்சேர்க்கும் இந்தக்கதையையும் படித்துப்பாருங்கள்

    http://massalamassala.blogspot.com/2009/06/blog-post_15.html

    ReplyDelete