Showing posts with label மூன்றாம்பால். Show all posts
Showing posts with label மூன்றாம்பால். Show all posts

Jan 25, 2011

சண்டக்கோழி











பகலில் கோவத்தில்
நானுன்னைத் திட்டியிருப்பேன்
இரவில் படுக்கையில்
நீயென்னை விலகிப்படுப்பாய்

கட்டிலில் கொவமென்ன என்பேன்
திட்டியது நியாயமா? என்பாய்
விளக்கனணக்கும் நேரத்தில்
வழக்கெதற்கு என்பேன்
இதற்கு மட்டுமா நானென்று
இரக்கமற்றுத் திட்டுவாய் 

நானும் 
அட அட  - நீ
திட்டுவது கூட – தேன்
சொட்டுவதுபோல் – உன்
வசைமொழி கூட
இசைமழைபோல்
என்றுன்னைப் புகழ்வேன்

உனக்கது பிடித்திருந்தாலும்
பிடிவாதத்தால் மீண்டும் முறைப்பாய்
சரி எதற்கிது என்று – நான்
சிவனேனு படுத்துவிட்டால்

நீ ஓரக்கண்ணால் – என்னை
உற்றுப்பார்ப்பாய் – நானும்
திரும்பிப்பார்ப்பேன்
அந்தப்பார்வைகள் கனைதொடுக்கும் 

பின்
வழக்கை நிறுத்தி
விளக்கை அணைத்து
வழக்கம்போல் லீலை தொடரும்..!!  
  

சாமக்கோழி











சாமத்திலே மிச்சமில்லாமல்
காமத்திலே உச்சம் காண்போம்
சேவலது சேலையில் நீந்த
கோழியது மெல்லக்கூவ
மறந்துபோகும் உலகம் யாவும் – பின்
இறந்தும் மூச்சு வாங்கும்..!!!

Jan 24, 2011

கலந்தது



















உன் கூந்தலை மெல்ல விலக்கி
கழுத்தோரம் முத்தமிட்டு
அழுத்தும் அணைப்பில்
விடிய விடிய
வெளுத்த கண்கள் சிவக்கும்
கொளுத்தும் நெருப்பாய் உடலாகும் – அது
இன்பம் கலக்கும் கடலாகும்..!!

அடிக்கல் நாட்டுவிழா

















உன்
முடிமுதல்
அடிவரை
முடிவில்லா முத்தமிட்டு
அடிக்கல் நாட்டினேன்
நம் பிள்ளைக்கு..!!

தாமரைக்கொடி














சேலைகட்டிய இடைவெளியில்
உன் இடை தெரிய
ஓரக்கண்ணால் உற்றுப்பார்த்தேன்
குடந்தூக்கும் இடை இதுதானா
தண்ணியில்லா
வெற்றுக்குடத்தின் சுமயைக்கூட
இந்த இடை தாங்காதே..!!

சேலையை அள்ளி செருகும்போது
மெதுவாக செருகு
அழுத்தம் கொடுத்தால்
அதையும் தாங்காது உன் மெல்லிடை..!!

உன்னிடையோ தாமரைக்கொடி
அந்தக்கொடிக்கு மேல் இரண்டு
தாமரை பூத்ததோ..!!

நீ சூடிய மல்லிகைச்சரம்
தாமரைக்கொடியை
தட்டி தட்டி பார்த்தது
என் கண்களதை
எட்டி எட்டி பார்த்தது..!! 

முதலிரவு













ஒதுங்கி ஒதுங்கிச் சென்றாய்
இன்றுவரை என்னிலிருந்து
அதற்காக
பதுங்கிப் பதுங்கி பாய்கிறேன்
இன்று உன் மீது...!!!

மத்தளம்













இடைவரை நீண்ட
உன் கூந்தலுக்கு
சடைமாட்டியாக நானிருந்தால் – உன்
இடையின் பின்னழகை
இரு மத்தளம்போல்
தட்டி தட்டிப்பார்பேன்...!!!