“புண்பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றுகிறோம்”
என்றெல்லாம் பழமொழி பேசும்
அன்பிற்குரிய நண்பர்களே..!
புண்ணுக்கு மருந்து புகைதானா ?
அப்படியென்றால்
ஈழத்தமிழர்கள் எத்தனையோபேர்
கை கால்களை இழந்து
புண்பட்டுத் துடிக்கிறார்கள்
யாராவது அவர்களுக்கு
புகைமூட்டமாவது போட்டுக்கொடுங்களேன்.!
பஞ்சுவச்ச சிகரெட்டை பற்றவைத்து
முத்தமிட்டு உறிஞ்சுகிறீர்களே
ஒருவேளையதில் தேன்வடிகிறதோ..?
உங்களில் ஒருவனென்ற
உரிமையோடு கேட்க்கிறேன்
ஒப்புக்கொள்வீர்களா ?
ஓடும்போது இளைப்பும்
உழைக்கும்போது களைப்பும்
மலையேரும்போது மலைப்பும்
மாங்காய்த்தின்றால் “சளி”ப்பும்
எற்படுமென்கிறேன்
ஒப்புக்கொள்வீர்களா?
புகைப்பிடித்தால்
மதுவருந்தும் “வாய்”ப்பை இழப்பாய்
மனைவியின் இதழ்களில்..!
ஒப்புக்கொள்வீர்களா?
பின்சுக்குழந்தையை கையிலெடுத்து
கொஞ்ச முயலுங்கள்
முத்தம் வேண்டாமென்று
முகத்தை திருப்பி
மூச்சுத்திணற அழுதுவிடும்..!
ஒப்புக்கொள்வீர்களா?
