Feb 5, 2011

அய்யோ பாவம் ..!














உன் புன்னகையில் 
பொன்னகையே
தோல்வியடைந்ததால்
பாவம்
வெள்ளிக்கொலுசு
உன் காலில் விழுந்துவிட்டது...! 

Jan 29, 2011

மூன்றாம் விரல்












புண்பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றுகிறோம்
என்றெல்லாம் பழமொழி பேசும்
அன்பிற்குரிய நண்பர்களே..!

புண்ணுக்கு மருந்து புகைதானா ?
அப்படியென்றால்
ஈழத்தமிழர்கள் எத்தனையோபேர்
கை கால்களை இழந்து
புண்பட்டுத் துடிக்கிறார்கள்
யாராவது அவர்களுக்கு
புகைமூட்டமாவது போட்டுக்கொடுங்களேன்.!

பஞ்சுவச்ச சிகரெட்டை பற்றவைத்து
முத்தமிட்டு உறிஞ்சுகிறீர்களே
ஒருவேளையதில் தேன்வடிகிறதோ..?

உங்களில் ஒருவனென்ற
உரிமையோடு கேட்க்கிறேன்
ஒப்புக்கொள்வீர்களா ?


ஓடும்போது இளைப்பும்
உழைக்கும்போது களைப்பும்
மலையேரும்போது மலைப்பும்
மாங்காய்த்தின்றால் “சளிப்பும்
எற்படுமென்கிறேன்
ஒப்புக்கொள்வீர்களா?


புகைப்பிடித்தால்
மதுவருந்தும் “வாய்ப்பை இழப்பாய்
மனைவியின் இதழ்களில்..!
ஒப்புக்கொள்வீர்களா?

பின்சுக்குழந்தையை கையிலெடுத்து
கொஞ்ச முயலுங்கள்
முத்தம் வேண்டாமென்று
முகத்தை திருப்பி
மூச்சுத்திணற அழுதுவிடும்..!
ஒப்புக்கொள்வீர்களா? 

Jan 26, 2011

விண்ணைத்தாண்டி வருவாயா?









மழையில்லை என்றால் 
பூமி காய்ந்துவிடும் 
நீயில்லை என்றால் 
என் வாழ்வு ஓய்ந்துவிடும் 
மழைவந்தால் 
பூமிக்கு பச்சைக்கொடி 
நீவந்தால் 
என் காதலுக்குப் பச்சைக்கொடி 
வருவாயா? மழையாக 
காய்ந்த என் காதல் 
தளிர்க்குமா? பசுங்கிளையாக..! 

Jan 25, 2011

அன்னை ஓர் தோழி..














பத்து மாதம்
செத்துப் பிழைத்து
பத்திரமாய் என்னை
பெத்து எடுத்து
பாலூட்டி வளர்த்தாள்
என் உடலை - தமிழ்
பாலூட்டி வளர்த்தாள்
என் உயிரை.!

ஊரறிய பொதுவாக
எனக்கோர் பெயர் வைத்தாள் - ஆனால்
தங்கம் வைரம் முத்து பவளம் என்று
பல பெயர் வைத்து
பல முறை என்னை அழைப்பாள்.!

நான் சிறு பிள்ளையில்
எனக்கு சோரூட்டுவாள்
நானவள் கையைக் கடித்தால் - அப்போதும்
என் பிள்ளைக்கு
பல் முளைத்துவிட்டதென்று
சில்லென்று சிரித்து மகிழ்வாள்.!

நான் சிறு பிள்ளையில்
என்னைக் குளிக்க வைப்பாள்
நான் அங்கும் இங்கும் ஆடும்போது
நேராக நில்லென்று - அப்போதே
நேர்மையை கற்றுக்கொடுத்தாள்.!

நான் சிறு பிள்ளையில்
என்னை நடக்க வைப்பாள்
நடக்கும்போதே – தடைகளைக்
கடக்கவும் கற்றுக்கொடுத்தாள்.!

நான் சிறு பிள்ளையில் – ஊரில்
வம்பு செய்து வந்தாலும்
கம்பு எடுத்து விரட்டாமல்
அன்பு எடுத்து தொடுத்தாள்
வம்பு செய்யாதே என்று.!

நான் எங்காவது செல்ல
பணம் கேட்டால்
சினம் கொள்ளாமல்
குணத்தோடு பணமும் எடுத்து – நல்ல
மனதோடு வாழ்த்தி அனுப்புவாள்
போய் வா என்று.!

செல்லமாக என்னைத் திட்டுவாள்
நான் சினுங்கினால்
செவியோரம் முத்தமிட்டு அணைப்பாள்.!

என்மீது
கோவப்படுவதுபோல் நடிப்பாள்.!
நான் முகம் சுழித்தால்
அவள் சற்று துடிப்பாள்
ஆவலோடு அள்ளி அணைப்பாள்.!

என் காதல் பருவத்தில்
அம்மா காதலிக்கிறேன் என்றதும்
அவள் பேதலிக்கவில்லை
இந்த வயதில் இது இயல்பு
காதலை அதிகப்படுத்தி
கடமையைக் குறைத்துவிடாதே
கடமையை வென்றால்
காதலையும் வெல்வாய் என்றாள்.!

எனக்கு தலைவலி என்றால்
அவளுக்கு நெஞ்சுவலி வந்துவிடும்.!
என் உடல்நிலை பாதிக்கப்பட்டால்
அவள் மனநிலை பாதிக்கப்படும்.!

மெத்தை பல இருந்தாலும்
அவள் மடிமீது தூங்கும் சுகம்
எனக்கு கிடைத்த வரம்.!

என் குழந்தை பருவத்தில் தாயாகவும்
என் இளமைப்பருவத்தில் தோழியாகவும்
என்னை வர்க்கிறாள்
என் அம்மா
இல்லை.! இல்லை.!!
என் தோழி.!!!


சண்டக்கோழி











பகலில் கோவத்தில்
நானுன்னைத் திட்டியிருப்பேன்
இரவில் படுக்கையில்
நீயென்னை விலகிப்படுப்பாய்

கட்டிலில் கொவமென்ன என்பேன்
திட்டியது நியாயமா? என்பாய்
விளக்கனணக்கும் நேரத்தில்
வழக்கெதற்கு என்பேன்
இதற்கு மட்டுமா நானென்று
இரக்கமற்றுத் திட்டுவாய் 

நானும் 
அட அட  - நீ
திட்டுவது கூட – தேன்
சொட்டுவதுபோல் – உன்
வசைமொழி கூட
இசைமழைபோல்
என்றுன்னைப் புகழ்வேன்

உனக்கது பிடித்திருந்தாலும்
பிடிவாதத்தால் மீண்டும் முறைப்பாய்
சரி எதற்கிது என்று – நான்
சிவனேனு படுத்துவிட்டால்

நீ ஓரக்கண்ணால் – என்னை
உற்றுப்பார்ப்பாய் – நானும்
திரும்பிப்பார்ப்பேன்
அந்தப்பார்வைகள் கனைதொடுக்கும் 

பின்
வழக்கை நிறுத்தி
விளக்கை அணைத்து
வழக்கம்போல் லீலை தொடரும்..!!  
  

சாமக்கோழி











சாமத்திலே மிச்சமில்லாமல்
காமத்திலே உச்சம் காண்போம்
சேவலது சேலையில் நீந்த
கோழியது மெல்லக்கூவ
மறந்துபோகும் உலகம் யாவும் – பின்
இறந்தும் மூச்சு வாங்கும்..!!!

துயில்கலைத்தல்











என்னவள் 
தூங்கும்போது 
நான்
சத்தம்போட்டு எழுப்புவதில்லை
மென்மையான
முத்தம்போட்டு எழுப்புகிறேன்..!!  

தாவணிக்கனவுகள்














தாவணியை நீயனிந்து
பவனி வந்தால்
தேரோடும் வீதியில்
தேவதையும் நீதான் ..!!
ஆரோடும் கரையிலமர்ந்தால்
அழகுத்தென்றலும் நீதான்..!!

Jan 24, 2011

கலந்தது



















உன் கூந்தலை மெல்ல விலக்கி
கழுத்தோரம் முத்தமிட்டு
அழுத்தும் அணைப்பில்
விடிய விடிய
வெளுத்த கண்கள் சிவக்கும்
கொளுத்தும் நெருப்பாய் உடலாகும் – அது
இன்பம் கலக்கும் கடலாகும்..!!

அடிக்கல் நாட்டுவிழா

















உன்
முடிமுதல்
அடிவரை
முடிவில்லா முத்தமிட்டு
அடிக்கல் நாட்டினேன்
நம் பிள்ளைக்கு..!!