Jan 25, 2011

சண்டக்கோழி











பகலில் கோவத்தில்
நானுன்னைத் திட்டியிருப்பேன்
இரவில் படுக்கையில்
நீயென்னை விலகிப்படுப்பாய்

கட்டிலில் கொவமென்ன என்பேன்
திட்டியது நியாயமா? என்பாய்
விளக்கனணக்கும் நேரத்தில்
வழக்கெதற்கு என்பேன்
இதற்கு மட்டுமா நானென்று
இரக்கமற்றுத் திட்டுவாய் 

நானும் 
அட அட  - நீ
திட்டுவது கூட – தேன்
சொட்டுவதுபோல் – உன்
வசைமொழி கூட
இசைமழைபோல்
என்றுன்னைப் புகழ்வேன்

உனக்கது பிடித்திருந்தாலும்
பிடிவாதத்தால் மீண்டும் முறைப்பாய்
சரி எதற்கிது என்று – நான்
சிவனேனு படுத்துவிட்டால்

நீ ஓரக்கண்ணால் – என்னை
உற்றுப்பார்ப்பாய் – நானும்
திரும்பிப்பார்ப்பேன்
அந்தப்பார்வைகள் கனைதொடுக்கும் 

பின்
வழக்கை நிறுத்தி
விளக்கை அணைத்து
வழக்கம்போல் லீலை தொடரும்..!!  
  

2 comments:

  1. அழகான ஊடல். எண்ணம் யாவும் இனிதே நிறைவேறட்டும். ....குடும்பம் ஒரு கதம்பம். ...

    ReplyDelete
  2. என் வலைப்பூவுக்கு வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete